திங்கள், 2 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2022 (19:26 IST)

புது வீட்டிற்கு பூஜை செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன?

Chaturthi - Pooja
புது வீட்டிற்கு கிரகப்பிரவேசம் செய்யும்போது சில முக்கிய பூஜைகள் செய்ய வேண்டும் என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்.
 
புதிய வீட்டில் குடியேறும் போது முறையாக பூஜை செய்ய வேண்டும் என்றும் பூஜைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் குறிப்பாக பூஜைக்கான நேரத்தை தவற விடக்கூடாது என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் 
 
பிரம்ம முகூர்த்தம் என்று கூறப்படும் அதிகாலை 4 மணி முதல் 6 மணிக்குள் தான் புதுமனை புகுவிழாவில் நடத்த வேண்டும் என்றும் காலை 9 மணிக்கு மேல் கிரகப்பிரவேசம் செய்ய கூடாது என்றும் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர் 
 
மேலும் வீட்டின் உரிமையாளர்கள் பாரம்பரிய உடை அணிந்திருக்க வேண்டியது அவசியம் என்றும் இறைவனின் படம் அரிசி உப்பு பருப்பு மஞ்சள் ஆகியவை ஆகிய மங்களகரமான பொருட்களை வைத்து பூஜை செய்ய வேண்டும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Mahendran