ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By

சிலவகை விருட்சங்களும் அதன் தெய்வீக சக்திகளும்!

மருதாணி மரம்: மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை.  இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.
ருத்ராட்ச மரம்: ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.
 
ஷர்ப்பகந்தி: இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.
 
நெல்லி மரம்: நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை  அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.
 
வில்வ மரம்: வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால் சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.
 
வேப்ப மரம்: வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி  மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.
 
காட்டு மரம்: காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை  வெளிபடுத்தும்.
 
அசோக மரம்: அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.
 
துளசி: துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு  குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து  வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.
 
தீய சக்திகள்:
 
கருவேல மரம்: கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும் என்பது நம்பிக்கை.
 
புளிய மரம்: புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள்  தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.