ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Anandakumar
Last Updated : சனி, 19 மார்ச் 2022 (00:11 IST)

பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு ...ஸ்ரீ பாலசுப்பிரமணியர் முருகனுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள்

பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் முருகனுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் மற்றும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி.
 
கரூர் நகரின் மையப்பகுதியில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ கரூர் மாரியம்மன் ஆலயத்தின் அருகே வீற்று அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலயத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் முருகனுக்கு பங்குனி உத்திர திருவிழாவினை முன்னிட்டு காலையில் மூலவர் அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியருக்கு விஷேச அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பால், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர், கரும்புசாறு, சந்தனம், விபூதி, தயிர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகங்கள் நடத்தப்பட்டது. பின்னர் மாலை அலங்கரிக்கப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது, விஷேச நட்சத்திர ஆரத்தி, கற்பூர ஆரத்தி, கோபுர ஆரத்திகளும், மஹா தீபாராதனைகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியர் அருள் பெற்றனர். அதனை தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்திவிநாயகர் ஆலய நிர்வாகமும், ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.