திங்கள், 9 டிசம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 10 அக்டோபர் 2024 (09:49 IST)

உலக பார்வை தினம்: ஆதரவற்றோர் இல்லங்களில் கண் பரிசோதனை, இலவச கண்ணாடிகள் வழங்கிய அகர்வால்ஸ்!

Agarwals

சென்னையில் உள்ள ஆதரவற்றோருக்கான இல்லங்களில் கண் பரிசோதனைகளை மேற்கொண்டு குழந்தைகளுக்கு கண் கண்ணாடிகளை இலவசமாக வழங்கிய டாக்டர் அகர்வால்ஸ்

 

 

 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழனன்று அனுசரிக்கப்படும் உலக பார்வை தினம் 2024 – ஐ குறிக்கும் வகையில் அக்டோபர் 31-ம் தேதி வரை சென்னை மாநகரில் உள்ள அதன் அனைத்து கிளினிக்குகள் மற்றும் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு இலவச கண் பரிசோதனைகளை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மேற்கொள்கிறது.  இதற்கு பதிவு செய்ய 9594924048 – தொடர்பு கொள்ளவும்.

 

 

 

சென்னை, அக்டோபர் 09, 2024: டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமம் மற்றும் கண் ஆராய்ச்சி மையத்தின் ஆதரவின் கீழ் இயங்கி வரும் பிரபலமான ஆப்டோமெட்ரி (பார்வை அளவையியல்) கல்லூரியான டாக்டர். அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரி, சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்காக இயங்கி வரும் 12 இல்லங்களில் 400-க்கும் அதிகமான குழந்தைகளுக்கு கண் பரிசோதனைகளை இலவசமாக மேற்கொண்டது மற்றும் தேவை இருப்பவர்களுக்கு கண் கண்ணாடிகளையும் தானமாக வழங்கியது.  இதற்கும் கூடுதலாக, அக்டோபர் 31-ம் தேதி வரை இம்மாநகரில் உள்ள அதன் அனைத்து கிளினிக்குள் மற்றும் மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கு விரிவான கண் பரிசோதனைகளை டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை கட்டணமின்றி இலவசமாக மேற்கொள்கிறது.  இதில் பங்கேற்று பயனடைய பதிவு செய்வதற்கு 9594924048 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

 

 

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதத்தின் இரண்டாவது வியாழக்கிழமையன்று உலக பார்வை தினம் அனுசரிக்கப்படுகிறது.  “குழந்தைகளே உங்கள் கண்களை நேசியுங்கள்” என்ற கருப்பொருளை தாங்கிய உலக பார்வை தினம் 2024 கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த சிறப்பான முன்னெடுப்புகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன.

 

 

 

ஆதரவற்ற குழந்தைகளுக்கான புகலிடங்களில் கண் கண்ணாடிகள் தேவையுள்ள நபர்களுக்கு கண்ணாடிகளை வழங்கும் நிகழ்வில் பார்வைத்திறனுடன் தொடர்புடைய பிற நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.   குழந்தைகளுக்கு கண் பராமரிப்பு மீது காணொளி காட்சிகளை திரையிடல், பேனா, பென்சில், நோட்டுப்புத்தகம் போன்றவற்றின் வினியோகம் மற்றும் சிற்றுண்டி வழங்கல் ஆகியவை இதில் இடம்பெற்றன.  “பார்வைத்திறன் மற்றும் புன்னகைகள் தினம்” என்ற கருப்பொருளைக் கொண்டு நடைபெற்ற இந்நிகழ்வுகள், இந்திய பார்வை அளவையியல் கூட்டமைப்பு (OCI), ஜெய்ஸ், ஹோயா விஷன் கேர் மற்றும் ரோட்டரி கிளப் ஆஃப் சென்னை மித்ரா ஆகியவற்றின் ஆதரவோடு சிறப்பாக நடத்தப்பட்டன. 

 

 

 

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் மருத்துவ சேவைகளுக்கான பிராந்திய தலைவர் டாக்டர். எஸ். சௌந்தரி இந்த முன்னெடுப்பு குறித்துப் பேசுகையில், “உலகளவில் 450 மில்லியன் குழந்தைகளுக்கு சிகிச்சை தேவைப்படும் பார்வை பாதிப்பு நிலைகள் இருக்கின்றன.  இவர்களில் பலருக்கு கண் சிகிச்சைப் பெறுவதற்கான வசதியில்லை.  இந்தியாவில் 0-15 வயது பிரிவிலுள்ள 1000 குழந்தைகளில் ஒரு குழந்தைப் பார்வைத் திறனற்றதாக இருக்கிறதென மதிப்பிடப்பட்டிருக்கிறது,  எந்தவொரு நாட்டிலும் மிக அதிக எண்ணிக்கையில் பார்வையற்ற குழந்தைகள் மிக அதிகமாக இருப்பது நம் நாட்டில்தான்.  கிட்டப்பார்வை என அழைக்கப்படும் மயோபியா, 5-15 வயது பிரிவிலுள்ள குழந்தைகள் மத்தியில் ஏறக்குறைய 7.5 சதவிகிதம் என்ற அளவில் இருப்பதாக அறியப்பட்டுள்ளது.  பார்வை குறைபாடுள்ள குழந்தைகள், பள்ளிக்கு செல்வதற்கான வாய்ப்புகள் 2-5 மடங்கு குறைவாக இருக்கும் மற்றும் பிற சமூக நிகழ்வுகளில் பங்கேற்க அவர்கள் பெரும்பாலும் தவறுகின்றனர் என்று ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றனர்.  எனவே, பார்வை சார்ந்த ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதற்கான வழிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதுடன், கண் பராமரிப்பு சேவைகள் எளிதில் கிடைக்கப்பெறுமாறு ஆக்குவதற்கு ஒருங்கிணைந்த நடவடிக்கையே இந்த காலகட்டத்தில் அத்தியாவசியத் தேவையாக இருக்கிறது.  சிறார்களது பார்வைத்திறன் மீது உலகப்பார்வை தின நிகழ்வுகள் சிறப்பு கவனம் செலுத்துகின்ற நிலையில், ஒவ்வொரு குழந்தையும் சிறந்த கண் பராமரிப்பு மற்றும் சிகிச்சைக்கு எளிதான அணுகுவசதியை கொண்டிருக்கின்ற ஒரு எதிர்காலம் மீது எமது அர்ப்பணிப்பையும், பொறுப்புறுதியையும் நாங்கள் புதுப்பித்துக் கொள்கிறோம்.” என்று கூறினார்.

 

 

 

இச்செயல்திட்டத்தின் முதன்மை அம்சங்கள் பற்றி தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்ட டாக்டர். அகர்வால்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆப்டோமெட்ரியின் டீன் டாக்டர். கற்பகம் தாமோதரன், “சிறார்கள் மத்தியில் கண் ஆரோக்கியப் பிரச்சனைகள் காணப்படும் அதிகரித்த விகிதத்தைக்  கருத்தில் கொள்ளும்போது, பொதுமக்கள் உட்பட, இதனோடு தொடர்புடைய அனைத்து அக்கறைப் பங்காளர்களும், ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுப்பது இன்றியமையாதது.  இளம் நபர்கள், அவர்களது கண் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிக்குமாறு அவர்களுக்கு உத்வேகம் அளிப்பது நமது கடமைப்பொறுப்பாகும்.  எங்களது இலவச கண் பரிசோதனைகளும் மற்றும் கண் கண்ணாடிகள் வினியோகமும் சென்னையில் ஆதரவற்ற குழந்தைகளுக்கான 12 இல்லங்களைச் சேர்ந்த 400 – க்கும் கூடுதலான சிறார்களுக்குப் பயனளித்திருக்கிறது.  அவர்களது கண்களை பாதுகாப்பது அவசியம் என்ற தெளிவான அறிவை சிறார்கள் கொண்டிருப்பதை உறுதி செய்வதும் மற்றும் அவர்களது பார்வைத் திறனுக்காக சுயமுனைப்பு நடவடிக்கைகளை எடுப்பதும் எமது குறிக்கோளாகும்.  ஆகவே, ஆதரவற்றோருக்கான இல்லம் ஒவ்வொன்றிலும் எமது குழுவினர் பல மணி நேரங்களை செலவிட்டனர்.  கண் பராமரிப்பு மற்றும் தூய்மை குறித்து காணொளி காட்சிகள் மற்றும் செய்முறை விளக்கங்கள் வழியாக அக்குழந்தைகளுக்கு தெளிவாக எடுத்துக்கூறி கற்பித்தனர்,” என்று கூறினார்.

 

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையில் குழந்தைகளுக்கான முதுநிலை கண் மருத்துவ நிபுணராகப் பணியாற்றும் டாக்டர். மஞ்சுளா ஜெயக்குமார், கண் பராமரிப்பிற்கான முன்தடுப்பு நடவடிக்கைகள் பற்றி பேசுகையில் கூறியதாவது: “தங்களது கண்கள் விலைமதிப்பற்றவை என்பதை குழந்தைகளும், சிறார்களும் புரிந்துகொள்வது அவசியம்.  தங்களது கண்களை தொடுவதற்கு முன்பாக, கைகளை கழுவுவது, தேய்ப்பதற்குப் பதிலாக தெளிவான டிஷ்யூக்களைப் பயன்படுத்துவது மற்றும் திரைகளிலிருந்து குறித்த காலஅளவுகளில் இடைவெளி விடுவது போன்ற எளிய பழக்கவழக்கங்களின் மூலம் கண்களை அவர்களால் பாதுகாத்துக்கொள்ள முடியும் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.  வெளியில் செல்லும்போது குளிர் கண்ணாடிகளைக் கொண்டு சூரிய ஒளியிலிருந்து கண்களை பாதுகாத்துக் கொள்வதும், டவல்கள் அல்லது கண் சொட்டு மருந்துகள் போன்ற தனிப்பட்ட பொருட்களை பிறரோடு பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பதும் அவசியம்.  கேரட்டுகள் மற்றும் இலைகள் கொண்ட காய்கறிகள் மற்றும் கீரைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வதன் மூலம் அவர்களது பார்வைத்திறனை அவர்கள் மேலும் வலுப்படுத்திக்கொள்ள முடியும்.  கண்ணில் அழுத்தம் அவர்களுக்கு இருக்குமானால் அல்லது அடிக்கடி தலைவலி வருமானால், கண் பராமரிப்பு மருத்துவரின் உதவி அவர்களுக்குத் தேவைப்படுகிறது என்பதையே இந்த அறிகுறிகள் சுட்டிக்காட்டுகின்றன.”