வெள்ளி, 29 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 17 மே 2023 (18:52 IST)

சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படுமா?

Stroke
சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் தடைபடுவதால் சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
 
சர்க்கரை நோயாளிகள் பக்கவாதம் வருவதை தடுப்பதற்கு மருத்துவரை அணுகி தேவையான சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. 
சர்க்கரை கட்டுப்பாட்டில் இல்லாத போது ரத்த நாளங்களில் அலர்ச்சி ஏற்பட்டு மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் பாதிப்படையும் என்றும் இதனால் பக்கவாதம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது 
 
சர்க்கரை நோயாளிகளுக்கு இருதய நோய், அதிக கொலஸ்ட்ரால், சிறுநீரக பாதிப்பு, ரத்த கொதிப்பு, உடல் பருமன் ஆகிய பிரச்சனைகள் வந்துகொண்டிருக்கும் நிலையில் அத்துடன் பக்கவாதம் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும் என சர்க்கரை நோயாளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran