ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. ப‌ல்சுவை
  2. மரு‌த்துவ‌ம்
  3. மருத்துவ செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 9 நவம்பர் 2024 (17:59 IST)

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சில குழந்தைகளுக்கு மற்றும் சில பெரியவர்களுக்கு கழுத்தைச் சுற்றி கரும்படலம் ஏற்படும் நிலையில், அதை அழுக்கு என நினைத்து சிலர் சோப் போட்டு கழுவுவார்கள். சிலர் கிரீம் போடுவார்கள். ஆனால் உண்மையில் அது அழுக்கு அல்ல.
 
இன்சுலின் ரெசிஸ்டன்ஸ் காரணமாக ஏற்படும் பிரச்சனை தான் கழுத்தைச் சுற்றி மற்றும் அக்குள் பகுதியில் ஏற்படும் கரும்படலமாகும். நம் உடலில் உள்ள செல்கள் குளுக்கோசை பயன்படுத்தி ஆற்றலை பெறும் நிலையில், குளுக்கோசை செல்களுக்கு கொண்டு செல்லும் வேலையை செய்யும் இன்சுலின் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் போகும் நிலையில்தான் ரத்தத்தின் சர்க்கரை அளவு அதிகமாகின்றது.
 
இதன் காரணமாக தான் கழுத்து, அக்குள், தொடை, இடுக்குகளில் கரும்படலம் ஏற்படும். எனவே, இதை அழுக்கு என்று கருதி நாமாகவே எந்த சிகிச்சையும் செய்யாமல், உடனடியாக நோயின் காரணத்தை அறிய மருத்துவரிடம் சென்று சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.
 
 
Edited by Mahendran