மாம்பழ விற்பனை துவங்கி படு ஜோராக நடந்து வருகிறது. எங்கு பார்த்தாலும் மஞ்ஞை மஞ்சேலென காட்சி அளிக்கிறது மாம்பழங்கள். தெருவோரக் கடைகளிலும் சரி, நடைபாதைக் கடைகளிலும் சரி தற்போது அதிகம் வியாபாரமாவது மாம்பழம்தான்.