2020- முக்கிய நிகழ்வுகள்: வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகளின் போராட்டம்!!

Delhi
சினோஜ்| Last Updated: செவ்வாய், 15 டிசம்பர் 2020 (22:28 IST)


உலகநாடுகளே உற்றுநோக்கிக்கொண்டிருப்பது தற்போது இந்தியாவின் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சா, உத்தரபிரதேசம், ஹைரியானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 1 கோடி விவசாடிகள் டெல்லி சலோ என்ற பெயரில் தலைநகர் தில்லியில் கடும் தோளைஉரிக்கும் மார்கழிக்குளிரிலும் மண்டையைப் பிளக்கும் பகல்வெயிலும் அந்தத் தலைநகரில் சூழ்ந்துள்ள மாசுகளுக்கிடையே தங்களின் போராட்டக் காலைப் பின்வைக்காமல் போராட்டி வருகின்றனர். அவர்களின் குரலில் ஒருமித்த குரலும் தீரமும் நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இன்றுடன் 20 வது நாளாக ஒரு போரட்டம் நடைபெற்றுவருவதும் இதுதான் உககிலேயே மிகப்பெரிய போராட்டம் என்ற பகுதிவையும் இது பெற்றுள்ளது.

சமீபத்தில் கனடா நாட்டு அதிபர் இந்திய விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது இருநாடுகளுக்கிடையேயான உறவின் விரிசல் விழுமளவும் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியது.

விவசாயிகளின் போராட்டத்தை அரசு பரிசீலிப்பதாகக் கூறவில்லை. ஆனால் அவர்களும் பலகட்டங்களாகப் பேச்சுவார்த்தைகள் நடத்தி அதில் தோல்விகண்டுள்ளதால் மேலும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.

இன்று, பாராளுமன்றக் குளிர்காலக்கூட்டத்தொடரும் இல்லையென்ற அறிவிப்புகள் தலைப்புச் செய்திகளாக காலையில் செய்திகள் ஒளிபரப்பானது. இதுகுறித்து விவாதிக்க விவசாயிகளின் படித்தவர்களும் உள்ளனர். எவ்வளவோ விசயங்கள் தெரிந்த விவசாயிகளும் உள்ளனர்.

இந்நிலையில் ஆளும் மத்திய பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு , விவசாயிகளின் போராட்டம் எதிர்க்கட்சிகளின் தூண்டுதலின்பேரில் நடக்கிறது என்று கருத்து தெரிவித்துவருகின்றனர்.

அதேசமயம் டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுகு ஆதரவாக அவர்களின் குடும்பத்தினரும் நாளைமுதல் டெல்லிசலோ போராட்டத்தி இணையவுள்ளதாகத் தகவல்கல் வெளியாகிறது.

நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தைக் கட்டிக்காக்கும் விவாயிகளின் இந்தப் போராட்டம் மக்களின் கண்களின் நீரை வரவழைப்பதாக உள்ளது.

மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று சட்டங்களால் யாருக்குச் சாதகம் யாருக்குப் பாதகம் என்பதுதான் இப்போதைய நாடுதழுவிய பேசுபொருளாக உள்ளது.
அந்த மூன்று சட்டங்கள்
  1. அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் (2020)
  2. விவசாய விளைபொருட்கள் வியாபாரம் (மற்றும் வர்த்தக மேம்படுத்துதல் எளிமைப்படுத்துதல்)
  3. 3)விவசாயிகளுக்கு அதிகாரமளித்தல், விலை உத்தரவாத ஒப்பந்தம்.
இன்று ஒரு மாவட்டத்தில் கரும்பு விளைச்சலுக்கான குறைந்த பட்ச விலையை வாங்குவதற்கே விவசாயிகள் பெரும் போராட்டத்தைச் சந்திக்கும்நிலையில், விவசாய ஒப்பந்தம் செய்து , அதைப் பெருநிறுவனங்களின் கைகளுக்குச் சென்றால் எப்படி விற்றுமுதலைப் பெறுவது… பெரும் பணம் படைத்த கார்ப்பரேட்டுகள் வசமிருந்து உரிய விலையைப் பெருவதும் குறைந்தபட்ச ஆதார விலையைப் பெறுவது
சாத்தியமாகுமா என்பதுதான் அனைத்து விவசாயிகளின் கேள்வி. ஆனால் இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகளுக்கு நட்டம் வராதுல் ; என்னநடந்தாலும் விவசாயிகள் ஒப்பந்தம் செய்த தொகை அவர்களுக்கு கிடைக்கும் என்று மத்திய அரசு கூறிவருகிறது.

ஆனால் ஏற்கனவே விவாசாய விலைநிர்ணயித்தல் மாநில அளவில் இருக்கும் பொழுது தற்போது வந்துள்ள சட்டம் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன.

அடுத்து விவசாயப்பொருட்களைப் பதுக்கிவைத்து அதை அதிக விலைக்கு விற்பதும், உள்நாட்டில் குறிப்பிட்ட பொருட்களுக்குக் கட்டுப்பாடு நிலவுகையில் அதை வெள்நாடுகளுக்கு விற்று லாபம் சம்பாதிக்க நினைத்தால் மக்கள் அதிகம் பாதிப்படைவர். இதைத்தடுக்கும் பொருட்டு பதுக்கலுக்கு அரசின் அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் தடைவிதிக்கிறது.

ஆனால் இந்தப் பதுக்கல் சட்டத்தால் பெருநிறுவனங்களின் குடோன்களுக்குச் சென்றால் விலை அதிகமாக வாய்ப்பு உள்ளது என எதிர்க்கட்சியினரும் விவசாயிகளும் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். சுதந்திரம் கொடுத்தால் விவசாயிகளின் உரிமை பறிபோகும் எனவும் கேள்விகள் கேட்க முடியாது எனவும் அச்சம்கொள்கின்றனர்.

அடுத்ததாக மூன்றாவது சட்டமான அத்தியாவசிப் பொருட்கள் திருத்தச் சட்டம்-2020
-ன்படி, வெங்காயம், பருப்புவகைகள்,எண்ணெய்வித்துகள், உணவு தானியங்கள் ஆகியவற்றை அத்தியாவசிப் பொருட்களின் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளது மத்திய அரசு. குறிப்பாக இப்பொருட்களை இருப்புவைத்துக்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்று இந்தச் சட்டத்தின் கூறப்பட்டுள்ளதும் விவசாயிகளைக் கவலையுறச் செய்துள்ளது.

நெடுநாட்களாக விவசாயிகள் சந்தித்து வரும் போராட்டத்திற்கு முடிவுரை எழுத மத்திய அரசு முயற்சிக்குமா இல்லை சட்டத்திருத்தத்திரு வழிவகுக்குமா.. இல்லை அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக்கொண்டு மத்திய அரசு விவசாய சங்கப் பிரதிநிதிகளின் தலைவருடன் கலந்துபேசி சுமூக உடன்பாடு எட்டப்படுமா என்பது அனைவரது எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

ஏனென்றால் விவசாசயிகளே நாட்டின் ஆதாரம்.


சினோஜ்


இதில் மேலும் படிக்கவும் :