திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. செய்திகள்
Written By
Last Updated : புதன், 25 ஜூலை 2018 (14:24 IST)

அல்லல்படும் டெலிகாம் துறை: ஜியோவே காரணம்!

கடந்த 2019 ஆம் ஆண்டு செம்டம்பர் மாதம் ரிலையன்ஸ் நிறுவனம் தனது ஜியோ தெலைத்தொடர்பு சேவையை துவங்கியது. அறிமுக சலுகையாக அனைத்தையும் இலவசமாக வழங்கியது. இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் ஜியோவை தேர்ந்தெடுத்தனர். 
ஆனால், தொலைத் தொடர்புத்துறையில் ஜியோ வருகைக்குப் பிறகு வாய்ஸ் கால்களுக்கு வசூலிக்கப்பட்ட கட்டணம் 66 விழுக்காடு வரை சரிந்து, 16 காசுகளாக குறைந்துள்ளது. 
 
2016 செப்டம்பர் மாதம் வரை ஒரு நிமிட வாய்ஸ் காலுக்கு 48 மற்றும் 51 காசுகள் என வசூலிக்கப்பட்டு வந்தது. இது டிசம்பரில் 44 காசுகளாகவும், கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச்சில் 31 காசுகளாகவும் குறைந்தது. 
 
அடுத்தடுத்து இவை 27, 23 மற்றும் 19 காசுகளாக சரிந்து, இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 16 காசுகளாக நிர்ணயிக்கப்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக டிராய் தரப்பு தெரிவிக்கின்றன.
 
மேலும், மார்ச் 2011 ஒரு மாதத்துக்கு 349 நிமிடங்களாக இருந்த வாய்ஸ் கால் சலுகை, செப்டம்பர் 2016 ஆம் ஆண்டு 366 நிமிடங்களாக உயர்த்தப்பட்டது. 
இந்த ஆண்டு மார்ச் மாதம் 584 நிமிடங்கள் வாய்ஸ் கால் சலுகையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டது. ஜியோவால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் சலுகை வழங்கவேண்டிய கட்டாயத்தில் உள்ள நிலையில் டெலிகாம் துறை அல்லல்பட்டு வருகிறது.