விஜய் டிவியில் கிறிஸ்மஸ் சிறப்பு நிகழ்ச்சிகள்
|
டிசம்பர் 24, மாலை 5 மணிக்கு 'ஜிங்கில் பெல்ஸ்' நிகழ்ச்சி இடம்பெறுகிறது. இதில் பிரபல இசையமைபாளர் ஹாரிஸ் ஜெயராஜ், நடிகர் லிவிங்ஸ்டன் ஆகியோர் தங்கள் இல்லத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் விதம் பற்றி நேயர்களிடம் பேசுகின்றனர்.
|
கிறிஸ்துமஸ் நாளான டிசம்பர் 25 அன்று காலை 8 மணிக்கு கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் இடம்பெறும். இதில் ஏசுவை போற்றும் பாடல்கள், அருளுரை ஆகியவை இடம்பெறும். சாம் செல்லத்துரை, மோகன் சி. லாசுரஸ், பாதிரியார் ஜான் ஆண்டுரூஸ் ஆகியோர் கிருஸ்துமஸ் தின சிறப்பைப் பற்றி நேயர்களுக்கு எடுத்துரைப்பார்.
|
|
மாலை 4 மணிக்கு 'கிறிஸ்துமஸ் சியர்' இடம்பெறும். தொடர்ந்து மூன்று மணி நேரம் கிருஸ்துமஸ் தின சிறப்பு பாடல்கள், ஏசுநாதர் பற்றிய கதைகள், சான்றோர்களின் அருளுரை என பல்வேறு சிறப்பு இடம்பெறுகிறது.
விஜய் டிவியின் கிறிஸ்துமஸ் தின சிறப்பு நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள்!
