1. பொழுதுபோக்கு
  2. »
  3. சின்னத்திரை
  4. »
  5. செய்திகள்

ரஷ்யப் படங்களை ஒளிபரப்பும் மக்கள் டிவி

ரஷ்யப் படங்களை ஒளிபரப்பும் மக்கள் டிவி
திரைப்படத்தை முகர்ந்து கூட பார்த்திராத மக்கள் டிவி, திரைப்படத்தின் மீதான ரசனையை மேம்படுத்தும் வகையில் காலத்தை வென்ற ரஷ்யத் திரைப்படங்களை ஒளிபரப்பி வருகிறது.

webdunia photoWD
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை ஒளிபரப்பாகும் இந்த திரைப்படப் பகுதியில் வரும் வாரம் பேக் டு த ·ப்யூச்சர் என்ற திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

கால இயந்திரத்தைப் பயன்படுத்தி 16ம் நூற்றாண்டுக்குச் செல்லும் இருவரைப் பற்றிய இந்தப் படத்தை இயக்கியவர் லியோனிட் கைடு.

1973ஆம் ஆண்டு வெளிவந்த வெற்றி பெற்ற இந்த படம், ஆகஸ்டு 31ம் தேதி மதியம் 2 மணிக்கு மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

ஏற்கனவே ஈரான் திரைப்படங்களை ஒளிபரப்பு நேயர்களின் பெருத்த ஆதரவைப் பெற்றது மக்கள் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.
About Writer
Webdunia