சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு...
|
சாலக்குடியில் இருந்து புறப்பட்டு, சாலக்குடி ஆற்றங்கரையோரமாகவேச் செல்லும் சாலையில் ஒரு 10 கி.மீ. தூரம் பயணம் செய்தால் அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சியைக் காணலாம்.
அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய நயாகரா நீர் வீழ்ச்சியின் சிறு வடிவம் போல இருப்பது அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியாகும்.
சாலக்குடி ஆற்றில் திடீரென்று செங்குத்தாய் உள்ள நீண்ட பாறைச்சரிவில் அழகாய் விழும் அற்புத நீர்வீழ்ச்சி அதிரம்பள்ளி.
இந்த நீர்வீழ்ச்சியின் மேல்பகுதிக்குச் சென்று ஓரளவிற்கு ஆற்றில் நடந்து நீர் விழும் காட்சியை பார்ப்பதற்கும் வாய்ப்புள்ளது.
|
|
அங்கிருந்து மேலும் 1 கி.மீ. தூரம் சென்றால்... நீங்கள் ஒரு அழகிய காட்சியைக் காணலாம். சாலக்குடி நதி ஒரு கி.மீ. அகலத்திற்கு இரண்டு மலைப்பகுதிகளுக்கு இடையே ஓடும் காட்சி அற்புதமானது. இந்த இடத்தை வாழச்சால் என்று கூறுவார்கள். வெள்ளம் இல்லாத நேரத்தில்தான் இங்கு அனுமதி கிடைக்கும்.
|
இந்திராகாந்தி உயிரியல் பூங்கா என்று அழைக்கப்படும் மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட இந்த வனப்பகுதிக்குப் பெயர் இரவிக்குளம். இக்காட்டுப் பகுதிக்குள் செல்வது மிக அற்புதமான சற்றே ஆபத்து நிறைந்த அனுபவமாகும். சில நேரங்களில் யானைகளின் குறுக்கீடு இருக்கும். அப்பொழுதெல்லாம் வண்டியை நிறுத்திவிட்டு சிவனை வேண்டிக் கொண்டு சிவனே என்று உட்கார்ந்திருக்க வேண்டியதுதான். யானை ஐயாக்கள் சென்ற உடன்தான் பயணத்தைத் தொடர முடியும்.
இந்த பயணத்தின்போது மலைகளின் பக்கவாட்டில் முளைத்திருக்கும் அரிதான பல தாவரங்களையும் அவைகளில் பூத்திருக்கும் நாம் இதுவரை காணாத மலர்களையும் காணலாம்.
| |
|
வழியில் ஆங்காங்கு நீங்கள் சில மலைவாழ் மக்களின் குடியிருப்புப் பகுதிகளையும் காணலாம். அவர்களையும் பார்க்கலாம்.
மூன்று முதல் நான்கு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு வால்பாறையை அடைவீர்கள். அங்கிருந்து பொள்ளாச்சி நோக்கி இறங்கினால் 38 கொண்டை ஊசி வளைவுகளுடன் கொண்ட மலைப்பாதையும் ஒரு அற்புதமான சுற்றுலாப் பயண அனுபவத்தைத் தரும்.
பாதி வழி வந்தவுடன் பொள்ளாச்சிப் பகுதியில் ஆழியாறு அணைப் பகுதியைக் காணலாம்.
அதனை அடுத்த வாரம் பார்ப்போம்....
