சாதாரணமா நெனச்சிடாதீங்க!
பொதுவா நம்மூரில் சர்தார்ஜிங்கள வச்சி நிறைய ஜோக் சொல்லுவோம். அவங்கள அடி முட்டாளா காண்பிப்பதில் என்ன அடிப்படை இருக்கிறது என்று பலருக்கும் தெரிவதில்லை. ஆனாலும் நமது சர்தார்ஜி நகைச்சுவை பாரம்பரியம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
இதுவும் அவர்களைப் பற்றியதுதான். ஆனால் மட்டம் தட்டுவது போல் இருக்காது. படித்துப் பாருங்கள்.
கப்பார் சிங் என்ற சர்தார்ஜி ஒருவர் இருந்தார். அவர் மும்பையில் உள்ள அலுவலகம் ஒன்றில் அலுவலக பணியாளராக (பியூன்) பணியாற்றிக் கொண்டிருந்தார்.
அவரிடம் ஒரு கெட்ட பழக்கம் இருந்தது. அதாவது யாராவது, ஒருவரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தால், நடுவில் புகுந்து, ஓ... அவரா? அவரை எனக்கு தெரியுமே என்று கூறுவார்.
ஒரு முறை அந்த அலுவலகத்தின் மேலதிகாரி (அமெரிக்காவில் பிறந்து வளர்ந்தவர்) ஆர்னால்ட் பற்றி பேசிக் கொண்டிருந்தார். உடனே எப்போதும் போல நமது கப்பார் சிங், ஓ ஆர்னால்டா அவர் என்னோட நண்பராச்சே என்று கூறினார்.
இதைக் கேட்ட முதலாளிக்கு சிரிப்பு வந்துவிட்டது. என்ன ஆர்னால்டை உனக்குத் தெரியுமா? சரி அடுத்த முறை நான் அமெரிக்காவிற்குப் போகும்போது உன்னையும் அழைத்துச் செல்கிறேன். உனக்கு ஆர்னால்டை தெரியுமா இல்லையா என்பைத அப்போது பார்க்கிறேன் என்று கூறினார்.
அதற்கு சர்தார்ஜியும் ஒப்புக் கொண்டு தலையசைத்தார்.
முதலாளி சொன்னபடியே கப்பார் சிங்கை அமெரிக்காவிற்கு அழைத்துப் போனார். பிறகு ஆர்னால்டின் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஆர்னால்ட் கப்பார் சிங்கைப் பார்த்ததும் ஓடி வந்து ஹாய் கப்பார்... எவ்வளவு நாளாச்சுடா உன்ன பார்த்து... எங்கடா போன இவ்வளவு நாளா என்று கேட்டவாறு அவரை உள்ளே அழைத்துச் சென்று தேனீர் விருந்து அளித்தார்.
அதுவரை வாசலில் நின்றிருந்தார் அதிர்ச்சியடைந்த முதலாளி. பின்னர் கப்பார் சிங் வந்ததும், கிளிண்டன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். கிளிண்டனும் ஆர்னால்டைப் போலவே கப்பார் சிங்கை கட்டி அணைத்துக் கொண்டு, ஒரு காபியாவது குடித்துவிட்டுப் போ என வற்புறுத்தினார்.
இதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தே போனார் முதலாளி.
கடைசியாக வாடிகனுக்கு கப்பார் சிங்கை அழைத்துப் போனார் முதலாளி. அங்கு மக்கள் கூட்டம் அலை மோதியது. அந்த கூட்டத்தில் உள்ளே நுழைவது மிகக் கடினமான விஷயமாக இருந்தது. எனவே கப்பார், தனது முதலாளியிடம் கொஞ்சம் இங்கேயே இருங்கள். நான் போய் வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.
சிறிது நேரத்தில் வாடிகன் மாளிகையின் பால்கனியில் இருந்து போப்பின் கைகளை பிடித்துக் கொண்டு கப்பார் சிங் தோன்றினான்.
அவ்வளவுதான் வாசலில் நின்று இதனைப் பார்த்துக் கொண்டிருந்த முதலாளி மயங்கி விழுந்தார்.
அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று சிகிச்சை அளித்த பின் கப்பார் சிங், என்ன ஆனது உங்களுக்கு? என்று கேட்டார்.
அதற்கு முதலாளி, "ஆர்னால்டை உனக்குத் தெரியும், கிளிண்டனுக்கும் உன்னைத் தெரியும், போப்புடனும் உனக்கு பழக்கம் இருக்கிறது. இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை. ஆனால்... நீ போப்புடன் பால்கனியில் தோன்றியதும் அங்கு கூடியிருந்த கூட்டத்தில் இருந்த ஒருவன், என்னிடம்... யாருடா அது பால்கனியில் கப்பார் சிங்கின் கையைப் பிடித்துக் கொண்டிருப்பது என்று கேட்டான். அதைத் தான் என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை" என்று கூறி விட்டு மீண்டும் மயக்கமானார்.