க்ரை ஃபிரீடம் (1987)
- கா. அய்யநாதன்
|
புகழ்பெற்ற இயக்குனர் ரிச்சர்ட் ஆட்டன்பரோ இயக்கிய இப்படம் 3 ஆஸ்கர் பரிசுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டது. 11 சர்வதேச விருதுகளையும் பெற்ற இத்திரைப்படம்தான் தென் ஆப்ரிக்க அரசின் இன வெறிக் கொடுமைகளை உலகத்தின் பார்வைக்கு கொண்டுவந்து அதிரவைத்தது.
1987ஆம் ஆண்டு வெளியான இப்படம், தென் ஆப்ரிக்காவின் வெள்ளை பத்திரிக்கையாளன் ஒருவனுக்கும், கறுப்பின விடுதலைப் போராளி ஒருவனுக்கும் இடையிலான ஆழ்ந்த நட்பை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதாகும்.
|
சம உரிமை கோரிப் போராடிய மக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வது, ஏதோ பொழுது போக்கு என்பது போல கறுப்பின சிறுவர்களை சில வெள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடும் காட்சிகள் நெஞ்சத்தைப் பதறவைத்தன.
|
அவர் தென் ஆப்ரிக்காவை விட்டுத் தப்பித்து, அந்நாட்டின் எல்லைப் பகுதிக்குள்ளேயே உள்ள மற்றொரு நாடான லிசாத்தோவிற்கு தப்பி வருவதே கிளைமாக்ஸ்.
ஒரே நாட்டில் வாழும் இரண்டு இனங்களின் மிக வித்தியாசப்பட்ட வாழ்கையை, சிந்தனைப் போக்கை சிறப்பாக காட்டினார் ரிச்சர்ட் ஆட்டன்பரோ. இன வெறிக் கொள்கையை வெள்ளையின மக்கள் எவ்வளவு சாதாரணமாக, அது நியாயமானது என்பதுபோல ஏற்றுக் கொண்ட மனப்பாங்கை ஆட்டன்பரோ சிறப்பாக்க் காட்டியிருந்தார்.
|
