வெற்றிகரமான இயக்குனர் போலவே வெற்றிகரமான நடிகர் என்ற பெயரையும் தனதாக்கியிருக்கிறார் சுந்தர் சி. அளவான மசாலாவுடன் இவர் நடித்து வெளிவரும் படங்கள் தயாரிப்பாளர்களின் பாக்கெட்டுகளை வளமாக்குகின்றன. இவரது ஐந்தாவது படம் 'தீ'. படத்தைக் குறித்த நம்பிக்கை சுந்தர் சி-யின் பேச்சில் பிரதிபலிக்கிறது. 'தீ' யில் உங்களுக்கு இரண்டு வேடங்களா? காவல் துறை அதிகாரியாக சாதிக்க முடியாத ஹீரோ காக்கி சட்டையை கழற்றிவிட்டு கதர்சட்டை அணிந்து அரசியலில் சாதித்துக் காட்டுவதுதான் கதை. இதனால் காவல் துறை அதிகாரியாகவும், அரசியல்வாதியாகவும் இரண்டுவிதமாக படத்தில் நடித்திருக்கிறேன். இதில் ராகினி, நமிதாவுக்கு என்னென்ன வேடங்கள்? ராகினி எனக்கு மனைவியா அதாவது காவல் துறை அதிகாரிக்கு மனைவியா வர்றாங்க. நமிதா நடிகையாக இருந்து அரசியலுக்கு வரும் கேரக்டரில் நடிச்சிருக்காங்க.