"சினிமா குறித்த மாயை விலக வேண்டும்"
- 'நிழல்' திருநாவுக்கரசு
தமிழில் குறும்பட, ஆவணப்பட வளர்ச்சி அபரிதமாக உள்ளது. சில வருடங்களுக்கு முன்பு வரை அறியப்படாத பகுதிகளாக இருந்த சலன ஊடகத்தின் இப்பிரிவுகளை வெளிச்சத்திற்கு கொண்டு வந்ததில் நிழல் இதழுக்கும், தமிழ்நாடு குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கத்திற்கும் பெரும்பங்கு உள்ளது.
நிழல் இதழும், படைப்பாளிகள் சங்கமும் இணைந்து சென்னையில் ஏழு தினங்கள் குறும்பட, ஆவணப்பட பயிற்சிப் பட்டறையை நடத்த இருக்கின்றன. இதையொட்டி, நிழல் இதழின் ஆசிரியரும் குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கத்தின் நிறுவனர்களில் ஒருவருமான வி.திருநாவுக்கரசைச் சந்தித்தோம்.
உங்களுடைய நிழல் இதழ் முழுக்க சினிமாவுக்கானது. அதில் குறும்பட, ஆவணப் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறீர்கள். அது ஏன்?
விஷூவல் மீடியாவின் பல பிரிவுகளில் ஒன்றுதான் திரைப்படம் என்று சொல்லப்படுகிற பியூச்சர் ஃபிலிம். இதுதவிர குறும்படம், ஆவணப்படம் என்கிற பிரிவுகளும் இருக்கு. ஆனா, இதுகுறித்த விழிப்புணர்வு தமிழ்நாட்டில் இல்லை. இங்குள்ள பெரியவர்களும் குறும்படங்கள், ஆவணப் படங்களுக்கு என்று தனியாக திரைப்பட விழாக்கள் இருப்பதைச் சொல்லாமல் மறைத்து விட்டார்கள். அதனால்தான் குறும்பட, ஆவணப் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறோம்.
தமிழ்நாடு குறும்பட, ஆவணப்பட படைப்பாளிகள் சங்கம் தொடங்கக் காரணம் என்ன?
குறும்பட, ஆவணப்பட இயக்கத்தை துரிதப்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட சங்கம்தான் இது. இந்தச் சங்கம் மூலம் உள்நாடு மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் தமிழ்க் குறும்படங்களைக் கொண்டு செல்கிற பணிகளைச் செய்கிறோம். பரிசுகள் வாங்கித் தருகிறோம்.
பயிற்சிப் பட்டறைகளும் நடத்துகிறீர்கள் அல்லவா?
இதுவரை பத்து மாவட்டங்களில் பயிற்சிப் பட்டறைகள் நடத்தியிருக்கிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எங்கும் ஆக்கிரமித்திருக்கிற இரண்டு விஷயங்கள் அரசியல், சினிமா. இதில் சினிமாவில் பண்பாட்டு அளவில் ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்கான முயற்சிகள்தான் இந்தப் பயிற்சிப் பட்டறைகள்.
முதலில் ஒரு படத்தை எப்படிப் பார்க்க வேண்டும் என்ற புரிதல் இருக்க வேண்டும். சினிமா என்பது ஏதோ பெரிய விஷயம் என்ற மாயை விலக வேண்டும். ஒவ்வொரு நபரும் ஒரு குறும்படம் எடுக்கும்போது சினிமா மீதான கவர்ச்சி உடைகிறது.
பயிற்சிப் பட்டறையில் என்னென்ன சொல்லித் தருகிறீர்கள்?
நடிப்பு, கேமரா, எடிட்டிங், திரைக்கதை, அனிமேஷன் ஆகியவை பற்றிச் சொல்லித் தருகிறோம். பாலசிங்கம் நடிப்பு வகுப்பைத் துவங்கிவைத்து தன்னுடைய அனுபவத்தைப் பகிர்ந்து கொள்கிறார். இயக்குநர் மிஷ்கின் இயக்கம் குறித்த வகுப்பைத் துவங்கி வைக்கிறார். இசையமைப்பாளர் நீரு போன்றவர்களும் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஏழு நாட்கள் முடிவில் மாணவர்களைக் குழுக்களாகப் பிரித்து, அவர்களே குறும்படம் எடுத்து எடிட் செய்ய வசதி செய்து தருகிறோம். 'இன்சிடென்ட் அட் தி அவுல் கிரிக்' மாதிரியான உலகப் புகழ்பெற்ற குறும்படங்கள், ஆவணப்படங்கள் திரையிடப்பட்டு அதன்மீது விவாதம் நடைபெறும்.
பயிற்சிப் பட்டறை எப்போது துவங்குகிறது?
இந்த மாதம் 25 துவங்கி 31 வரை ஏழு நாட்கள் நடக்கிறது. ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு இது விடுமுறை என்பதால் அவர்களை முன்னிறுத்தித்தான் இந்தப் பயிற்சிப் பட்டறையை நடத்துகிறோம்.
பிற துறைகளில் இருப்பவர்களும் இதில் ஆர்வம் காட்டுகிறார்களா?
இந்தப் பயிற்சிப் பட்டறையில் சேர முதலில் விண்ணப்பித்ததே ஒரு மருத்துவர்தான். பிற துறைகளில் இருப்பவர்களுக்கும் சினிமா மீது ஆர்வம் இருக்கும். அவர்கள் வேலை காரணமாக ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்டில் எல்லாம் போய்க் கற்றுக்கொள்ள முடியாது. அவர்களுக்கு இந்தப் பயிற்சிப் பட்டறை ரொம்ப உதவியாக இருக்கும்.
|