மும்பை : தூல் கா பூல், வாக், கனூன், கும்ராஜ், நிகாஹ் போன்ற பிரபல இந்தி திரைப்படங்களைத் தயாரித்தவர் பல்தேவ் ராஜ் சோப்ரா (94). நீண்ட நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்த இவர் இன்று காலை மும்பை ஜுகுவில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார்.