சார்லீஸ் தெரோனுக்கு வயது 38. பார்த்தால் யாரும் சொல்ல முடியாது. அவ்வளவு இளமை. இவரின் இரு படங்கள் விரைவில் வெளியாகின்றன. அதில் ஒன்று ஸ்னோ வொயிட் அண்ட் தி ஹன்ட்ஸ்மேன். கிரிஸ்டீன் ஸ்டூவர்ட், கிரிஸ் ஹெம்ஸ்வொர்த் நடிக்கும் இந்தப் படத்தில் ஈவில் குயின் ரவீனாவாக தெரோன் நடிக்கிறார். இந்தக் கேரக்டர் - அதாவது மோசமான பெண்ணாக நடிப்பது தனக்குப் பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவர் எதிர்பார்த்ததற்கு மேலாக சம்பளம் கிடைத்திருக்கும். | Charlize Theron, snow white and the huntsman