அனுஷ்கா ஆன் டிமாண்ட்
ஒரே நேரத்தில் இரு சரித்திரப் படங்களில் நடித்து வரும் அனுஷ்காவுக்கு அஜீத், ரஜினி படங்களில் நடிப்பதற்கான ஆஃபர் இன்னும் நிலுவையில் உள்ளது.
FILE |
குணசேகர் இயக்கத்தில் ருத்தரம்மாதேவி படத்திலும், எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கில் உருவாகும் மகாபலி (தெலுங்கில் பாகுபலி) படத்திலும் அனுஷ்கா தற்போது நடித்து வருகிறார். இரண்டுமே சரித்திரப் படங்கள். குணசேகரின் படத்தில் டைட்டில் ரோலான ருத்ரம்மாதேவி வேடம் அனுஷ்காவுக்கு. அவர்தான் கதையின் நாயகன், நாயகி எல்லாம்.
இவ்விரு படங்களையும் முடிக்கும்வரை வேறு படங்களில் நடிப்பதில்லை என்பது அனுஷ்காவின் முடிவு. குணசேகரின் ருத்ரம்மாதேவி படத்தின் டாக்கி போர்ஷன் முடிவடைந்துவிட்டது. மகாபலியின் போர்க் காட்சிகள் மட்டுமே முடிவடைந்துள்ளன. அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் இன்னும் எடுக்கப்பட உள்ளன.
