முதல்முறையாக யுவன் ஷங்கர் ராஜா இசையில் கவிப்பேரரசு வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். தமிழ் சினிமா சரித்திரத்தில் இதுவொரு முக்கியமான நிகழ்வு. ஈகோ யுத்தத்தில் இளையராஜாவும், வைரமுத்தும் பிரிந்த பிறகு ராஜா குடும்பமும் பேரரசு குடும்பமும் ஒட்டாத தீவுகளாயின.