கார்ப்பரேட் கம்பெனிகள் கலகலத்துப் போன நிலையில், தமிழ் சினிமாவை வாழ வைத்துக் கொண்டிருப்பவை சிறு தயாரிப்பு நிறுவனங்கள். குறைந்த முதலீட்டில் தயாரான வெண்ணிலா கபடிகுழு, பசங்க படங்களின் வெற்றி சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை ஊக்குவித்திருக்கிறது.