விகாஸ் ஸ்வரூப் எழுதிய Q&A நாவலை தழுவி இங்கிலாந்து இயக்குனர் டேனி பாய்ல் இயக்கிய ஸ்லம்டாக் மில்லியனர் எட்டு பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து சினிமாவின் உயரிய விருதான பாஃப்டா விருதையும் இப்படம் தனதாக்கியுள்ளது.