1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

நாயகனின் தில்லுமுல்லு!

நாயகன் ஜே.கே. ரித்தீஷ் தில்லுமுல்லு
நாயகன் வெற்றியிலிருந்து மீளவில்லை ஜே.கே. ரித்தீஷ். அடுத்தடுத்து இவரது திட்டங்களை கேட்டால் கண்ணில் பூச்சி பறக்கிறது.

அப்படியென்ன திட்டம்?

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடித்த நாயகன் படத்தின் பெயரை பயன்படுத்தியது போல், ரஜினி படத்தின் பெயரையும் பயன்படுத்த ரித்தீஷுக்கு ஆசையாம். முதல்கட்டமாக இவர் தேர்ந்தெடுத்திருப்பது பாலசந்தர் இயக்கத்தில் ரஜினி நடித்த தில்லுமுல்லு.

இந்த முறை பெயரை மட்டும் பயன்படுத்தாமல் ரஜினியின் மேனரிஸங்களையும் ரிபீட் பண்ணப் போறாராம்.

ஒரு ரஜினியை சமாளிக்கவே தமிழ்நாட்டில் முடியவில்லை. இதில் இன்னொரு ரஜினி... கடவுளுக்கு கருணையே இல்லையா!
About Writer
Webdunia