1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ரீ-மேக் படத்தில் அர்ச்சனா!

ரீ-மேக் அர்ச்சனா
வேகம் படம் மூலம் தமிழுக்கு வந்தவர் அர்ச்சனா. அதிரடியாக கலக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர் பிறகு ஆளையே காணவில்லை. ஏன் என்று கேட்டால் ரீ-மேக் லிஸ்ட் ஒன்றை காட்டுகிறார்.

தமிழில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கில் இவர்தான் ஹீரோயினாம். அதேபோல், திமிரு படத்தின் கன்னட ரீ-மேக்கில் ரீமாசென் வேடத்தை செய்யப் போகிறவரும் இவர்தானாம்.

கன்னடம், தெலுங்கில் முன்னணியில் இருநூதாலும் தமிழ்தான் அர்ச்சனாவின் இலக்கு. ரிஷியுடன் நடித்திருக்கும் தமிழகம், தனது தமிழ் கனவை நிறைவேற்றும் என நம்புகிறார் அர்ச்சனா.

வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் அர்ச்சனாவையும் காப்பாற்றும்.
About Writer
Webdunia