1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

சுட்டபழத்திற்கு ஏ சான்றிதழ்!

சுட்டபழம்
ஐம்பது அறுபது மீட்டருக்கு வெட்டி எறிந்த பிறகும் திருப்தியில்லாமல் சுட்டபழத்திற்கு ஏ சான்றிதழ் அளித்துள்ளது தணிக்கைக் குழு.

விடுதி நடத்தும் மோகனை (மைக் மோகனேதான்!) சைக்கோ கொலைகாரன் என போலீஸ் சந்தேகிக்கிறது. உண்மை என்ன என்பதை மோகனுடன் 'பழகி' அறிய போலிசால் அனுப்பப்படுகிறார் சுபா புஞ்சா. இறுதியில் மோகன் நிரபராதி என தெரிய வருகிறது.

படத்தின் கதை இது என்றாலும், மோகனும், சுபா புஞ்சாவும் 'பழகு'வதுதான் படத்தின் பிரதான அம்சம். ·பிரெஞ்ச் கிஸ், குளியல் மற்றும் படுக்கையறை காட்சிகளை சற்று விரிவாகவே காட்சிப்படுத்தியதில் ஆங்காங்கே விரசம். சென்சார் கத்திரிக்கோல் போட்ட பிறகும், வயது வந்தவர்கள் மட்டுமே பார்க்கும் ஏ சான்றிதழே படத்திற்கு கிடைத்துள்ளது. படத்தின் இயக்குனர் ஜி. காமராஜுக்கு இதில் ஏக குஷி.

சில காட்சிகளை சென்சார் வெட்டினாலும் படத்தில் இளமையான காட்சிகளுக்கு பஞ்சமில்லை என்கிறார் காம-ராஜ்?
About Writer
Webdunia