சூரியகிரணின் 3 தமிழ்ப் படங்கள்!
'மெளன கீதங்கள்' புகழ் மாஸ்டர் சுரேஷ் சூரியகிரண் என்று தன் பெயரை மாற்றிக் கொண்டுள்ளார். தெலுங்கில் படம் இயக்கவிருப்பதாக இருந்த திட்டத்தை கைவிட்டு தமிழில் தயாரிப்பு நிறுவனமொன்றை துவக்கியுள்ளார்.
'ட்ராக் அண்ட் டிராலி மீடியா நெட்வொர்க்' என்பது சுரேஷ் மன்னிக்கவும் சூரியகிரண் ஆரம்பித்துள்ள நிறுவனத்தின் பெயர். இதன்மூலம் 3 தமிழ்பூ படங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன. அனைத்தும் புதுமுகங்களாக நடிக்கும் ஒரு படத்தை கிரண் இயக்குகிறார்.
இன்னொரு படத்தை இயக்கவிருப்பது 'ஆக்ரா' பட இயக்குனர் சித்திரைச் செல்வன். மற்றொரு படம் 'சிந்து நதி பூ' இயக்குநர் செந்தமிழன் கைவண்ணத்தில் வெளிவர உள்ளது.
சோடாப்புட்டி கண்ணாடியும், கான்வெண்ட் இங்கிலிஷ் உச்சரிப்புமாக மெள கீதங்களில் வாண்டுப் பயனாக வலம் வந்த மாஸ்டர் சுரேஷ், இன்று தயாரிப்பு, இயக்கம் என தமிழ், தெலுங்கு திரையுலகத்தில் வளைய வருவது ஆச்சர்யப்படக்கூடிய விஷயம் மட்டுமல்ல. வாழ்த்துதலுக்குரிய விஷயமும் கூட.