1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

வாரணம் ஆயிரம் - மாறிய கேமராமேன்!

வாரணம் ஆயிரம் கேமராமேன் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ரோபோ
ரோபோ படத்தின் லொக்கேஷன் பார்க்க ஷங்கருடன் சென்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ரத்னவேலு. வாரணம் ஆயிரம் படம் முடியும் முன்பே, அந்தப் படத்திலிருந்து ரத்னவேலு எஸ்கேப்.

ஷங்கர், ரஜினி கூட்டணியில் வேலை பார்ப்பது எப்போதாவது கிடைக்கும் அரிய குறிஞ்சிப் பூ. அதனை தவறவிட மனமில்லாததால்தான் இந்த எஸ்கேப்.

ரத்னவேலு பாதியில் கழண்டு கொண்டதால் அவருக்குப் பதில் வாரணம் ஆயிரத்தின் சில காட்சிகளை எம்.எஸ். பிரபு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

வாரணம் ஆயிரத்தில் படமாக்கப்பட வேண்டிய காட்சிகள் இன்னும் இருப்பதாக கேள்வி. படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைத்ததற்கு இதுதான் காரணமாம்.
About Writer
Webdunia