1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

பிரபுதேவா - மீண்டும் நடன இயக்குனர்!

போக்கிரி பிரபுதேவா ராஜு சுந்தரம்
நடிகர், இயக்குனர் என பல முகங்கள் இருந்தாலும், பிரபுதேவாவின் அடையாளம் நட இயக்குனர். போக்கிரி, இந்தி போக்கிரி, விஜயின் புதிய படம் என இயக்கத்தில் பிஸியானதால், சில மாதங்களாக தனது அடையாளத்தை தொலைத்துவிட்டார் நடனப்புயல்.

அண்ணன் ராஜு சுந்தரம் தயவில் மீண்டும் நடன இயக்குனராகிறார் பிரபுதேவா.

அஜித், நயன்தாரா நடிக்கும் ஏகனின் படப்பிடிப்பை ஏற்காட்டில் நடத்திக் கொண்டிருக்கிறார் ராஜு சுந்தரம். அடுத்து ஏகன் டீம் தேக்கடி செல்கிறது. அங்கு ஒரு பாடல் காட்சி. இதற்கு நடனம் அமைக்கிறார் பிரபுதேவா.

விஜய் படத்துக்காக லொக்கேஷன் பார்க்க கஜகஸ்தான் சென்றிருக்கும் பிரபுதேவா, திரும்பியதும் பாடல் காட்சி தொடங்கப்படும்.

நீண்ட நாட்களுக்குப் பிறகு பிரபுதேவா அடுத்தவர்களின் படத்துக்கு அமைக்கும் நடனம் இது.
About Writer
Webdunia