1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

பேரரசுவின் திருவண்ணாமலை!

பேரரசு திருவண்ணாமலை அர்ஜுன்
பேரரசு தனது அடுத்தப் படத்துக்கான பெயரை தேர்வு செய்துவிட்டார். அர்ஜுன் நடிக்கும் அந்தப் படத்தின் பெயர் திருவண்ணாமலை!

குசேலன், ஜீவன் நடிக்கும் கிருஷ்ணலீலை என இரு படங்களை தயாரித்து வரும் கவிதாலயா, பேரரசுவின் புதிய படத்தை தயாரிக்கிறது.

வழக்கமான கமர்ஷியல் பஞ்சாமிர்தம்தான் கதை. 'பழனி'யில் பேரரசு பலரை நடிக்க கேட்டும் எந்த முன்னணி நடிகையும் கால்ஷீட் கொடுக்கவில்லை. கடைசியில் காஜர் அகர்வாலை நடிக்க வைத்தார்.

அந்த கோபத்தில் புதுமுகம் ஒருவரையே திருவண்ணாமலையில் நடிக்க வைப்பது என்பதில் தீர்மானமாக இருக்கிறாராம் பேரரசு.

படத்தில் நீங்களும் நடிப்பீர்கள்தானே?
About Writer
Webdunia