1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

பியா - ஏகனின் இரண்டாவது நாயகி!

பியா ஏகன் நவ்தீப்
ஏகன் படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

தாடியுடன் அஜித் இடம்பெறும் ஆக்சன் காட்சிகளை முதலில் இயக்கினார் ராஜு சுந்தரம். இப்போது தாடிக்கு விடை கொடுத்துவிட்டார் அஜித்.

ஏகனில் காதல் காட்சிகளுக்கும், சென்டிமெண்ட் சீன்களுக்கும் முக்கியத்துவம் அளித்திருக்கிறார் இயக்குனர்.

படத்திக் கதைப்படி அஜித்தின் அப்பாவுக்கு இரு மனைவிகள். மூத்த மனைவியின் மகன் அஜித். இரண்டாவது மனைவி சுஹாசினி. அவரது மகன் நவ்தீப்.

படத்தில் நவ்தீப்பிற்கு ஜோடி உண்டு. தமிழ்நாட்டில் யாரும் சிக்காமல் வடக்கேயிருந்து வலை வீசி பிடித்து வந்திருக்கிறார்கள். அவர் பெயர் பியா. மும்பையின் பிரபல மாடல்.

பியா தமிழ்ப்படமொன்றில் நடிப்பது இதுவே முதல் முறை!
About Writer
Webdunia