1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

வெளிநாடு பறக்கும் குருவி!

குருவி பாடல் காட்சி
வெளிநாட்டில் பாடல் காட்சி எடுப்பது என்பது கோடபம்பாக்கத்தில் எழுதப்படாத விதி. அந்த விதிக்கு ஏற்ப குருவியும் வெளிநாடு பறக்கிறது.

விஜய், த்ரிஷா சம்பந்தப்பட்ட டூயட் பாடலொன்றை நியூசிலாந்தில் படமாக்க உள்ளார் தரணி. மற்ற அனைத்துப் பாடல்களும் ஏற்கனவே படமாக்கப்பட்டுவிட்டன.

மாளவிகாவுடன் விஜய் ஆடும் பாடலொன்றை புதிதாக குருவியில் சேர்த்திருக்கிறார்கள். ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் அரங்கு அமைத்து இந்தப் பாடலை எடுக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
About Writer
Webdunia