சரித்திரம் படைக்கும் சாமி!
Publish: Mon, 24 Mar 2008 (18:30 IST)
Updated: Mon, 24 Mar 2008 (18:30 IST)
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தடை உத்தரவால் தளர்ந்திருந்த சாமிக்கு முதல் சந்தோஷம். அவரது புதிய படத்துக்கு அம்சமான பெயர் ஒன்று அகப்பட்டிருக்கிறது. சாமியின் புதிய படத்தை ஐடிஜ பிலிம்ஸ் தயாரிக்கிறது. ராஜ்கிரண் ஹீரோ. படத்துக்கு 'அய்யனார்' என பெயர் வைக்க விரும்பினார் சாமி. ஆனால், அய்யனாரை ஏற்கனவே சேம்பரில் பதிவு செய்து வைத்திருந்தார் கிரீடம் இயக்குனர் விஜய். சாமி கேட்கும் பெயர் வரம் கொடுக்கவில்லையாம் விஜய்.சாமியின் மனதில் இருந்த இன்னொரு பெயர் ஆசான். அதனை எங்கள் ஆசான் என விஜயகாந்த் படத்துக்கு வைத்து, ஆசானையும் சாமி மனதிலிருந்து அழித்து விட்டனர்.
நீண்ட தேடலுக்குப் பிறகு சரித்திரம் என்ற பெயரை சூட்டியிருக்கிறார் சாமி. படப்பிடிப்புக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார். தடையை தளர்த்தினால், சாமி சரித்திரம் படைக்க கிளம்பி விடுவார். தயாரிப்பாளர்கள் சங்கம்தான் கருணை காட்ட வேண்டும்!