பில்லா நூறாவது நாள்!
|
அஜித்தின் முந்தையப் படங்களான கிரீடம், ஆழ்வார் இரண்டும் சரியாகப் போகவில்லை. வெற்றி பெற்றே ஆக வேண்டிய நிர்ப்பந்தத்தில் தொடங்கப்பட்டப் படம் பில்லா. விஷ்ணுவர்தனின் ஸ்டைலிஷான இயக்கம் வெற்றியை சாத்தியப்படுத்தியது.
சிவாஜிக்குப் பிறகு சென்னையில் அதிகம் வசூலித்த படம் பில்லா. ஏறக்குறைய நான்கே முக்கால் கோடி! நூறு நாள் ஆன பிறகும் கலெக்ஷனில் இன்னும் முதல் பத்து இடத்திற்குள் இருக்கிறது அஜித்தின் இந்தப் படம்.
படத்தின் வெற்றி விழாக்களை கொண்டாடுவதில் விருப்பமில்லாதவர் அஜித். பில்லா வெற்றி விழாவை கொண்டாடுவதிலும் அவருக்கு விருப்பமில்லை. படத்தில் பணிபுரிந்தவர்கள் மனசுக்குள்ளேயே ஷீல்டு பரிமாறிக்கொள்ள வேண்டியதுதான்!
