1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

புளோராவு‌க்கு ப‌ரி‌ந்து பேசு‌ம் ம‌ன்சூ‌ர்

புளோரா ம‌ன்சூ‌ர் அ‌லிகா‌ன் புழ‌‌ல் நடிக‌ர் ச‌ங்க‌ம்
பு‌ழ‌ல் ‌சிறை‌யி‌ல் இரு‌க்கு‌ம் புளோராவு‌க்கு பு‌திய ஆறுத‌ல், ம‌ன்சூ‌ர் அ‌லிகா‌ன்! அமெ‌ரி‌க்காவு‌க்கு ஆ‌ள் கட‌த்த முய‌ன்றா‌ர் என புளோராவை ‌பிடி‌த்து புழ‌லி‌ல் அடை‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ர் கு‌ற்றவா‌‌ளியாக இ‌ல்லையா எ‌ன்பதை ‌நீ‌திம‌ன்ற‌ம் முடிவு செ‌ய்யு‌ம் மு‌ன்பே மு‌ந்‌தி‌க் கொ‌ண்டு ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்‌திரு‌க்‌கிறது நடிக‌ர் ச‌ங்க‌ம். புளோரா நடிக‌ர் ச‌ங்க‌த்த‌ி‌ன் அடி‌ப்படை உறு‌ப்‌பின‌ர் பத‌வி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்‌கிறா‌ர்.

அனைவரு‌ம் கை‌வி‌ட்ட ‌நிலை‌யி‌ல் புளோராவு‌க்கு ஆறுதலாக மெளன‌ம் கலை‌த்‌திரு‌க்‌கிறா‌ர் ம‌ன்சூ‌ர்.

புளோரா அமெ‌ரி‌க்கா போ‌ல் ‌திருடவா செ‌ய்தா‌ர்? ஏஜெ‌ண்டுக‌ள் செ‌ய்த தவறு‌க்கு அவரை எ‌ப்படி த‌ண்டி‌க்கலா‌ம். ஒரு வ‌க்‌கீலு‌க்கு ‌பிர‌ச்சனை எ‌ன்றா‌ல் மொ‌த்த வ‌க்க‌ீ‌லு‌ம் போராடு‌கிறா‌ர்க‌ள். ச‌ங்க‌ம் எ‌ன்பதே உறு‌ப்‌பின‌ர்க‌ளி‌ன் ‌பிர‌ச்சனை‌க்கு குர‌ல் கொடு‌க்கதா‌ன். அதை ‌வி‌‌ட்டு புளோராவை நடிக‌ர் ச‌ங்க‌த்‌தி‌‌லிரு‌ந்து ‌நீ‌க்‌கியது அ‌நியாய‌ம்!

ம‌ன்சூ‌ரி‌ன் கொ‌தி‌ப்பு‌க்கு நடிக‌ர் ச‌ங்க‌ம் ம‌தி‌ப்பு கொடு‌க்குமா, தெ‌ரியாது. க‌ம்‌பிகளு‌க்கு ‌பி‌ன்னா‌லிரு‌‌க்கு‌ம் புளோரா‌வி‌ன் காய‌த்து‌க்கு ‌நி‌ச்சய‌ம் க‌ளி‌‌ம்பு தட‌வி‌யிரு‌க்கு‌ம்!

ம‌ன்சூ‌ரி‌ன் அ‌றி‌க்கை வ‌ந்த நேர‌ம், புளோராவு‌க்கு ‌நிப‌ந்தனை ஜா‌மீ‌ன் அ‌ளி‌த்‌திரு‌க்‌கிறது ‌நீ‌திம‌ன்ற‌ம்.