யாரடி நீ மோகினியில் ரீ-மிக்ஸ் பாடல்
|
யாரடி நீ மோகினி படத்திற்காக சிவாஜியின் வியட்நாம் வீடு படத்தில் இடம்பெற்ற பாலக்காடு பக்கத்திலே... பாடலை ரீ - மிக்ஸ் செய்திருக்கிறார்கள்.
யாரடி நீ மோகினியின் ஒரிஜினல் தெலுங்குப் படத்தில் ரீ-மிக்ஸ் பாடல் எதுவும் கிடையாது. அதனால், பாலக்காடு ரீ மிக்ஸை வைப்பதா, அப்படியே வைத்தால் படத்தில் எங்கு வைப்பது என்பதை தீர்மானிக்க, கதாசிரியர் செல்வராகவனுக்காக காத்திருக்கிறார்கள்.
இந்த மாத இறுதியில் படத்தை வெளியிட வேலைகள் நடந்து வருகின்றன.
