1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

கரு.பழனியப்பனு‌க்காக காத்திருக்கும் தயா‌ரி‌ப்பாள‌ர்க‌ள்

ரிசல்ட்டுக்காக காத்திருக்கும் இயக்குனர் கரு.பழனியப்பன்
webdunia photoWD
வழக்கமாக ரிலீஸுக்கு முதல்நாள் வரையிலும் படங்கள் ஏதாவது ஒரு காரணத்தால் லேப்பிலேயே இருக்கும். கடைசி நேரத்தில் அவசர அவசரமாக பிரிண்ட் போட்டு தியேட்டருக்கு அனுப்புவார்கள்.

ஆனால் பொங்கலுக்கு ரிலீஸன பிரிவோம் சந்திப்போம் படத்தின் பிரிண்டுகள் எல்லாம் மு‌ன்பே ரெடியாகி படம் தியேட்டருக்கு போகத் தயாராக இரு‌ந்ததா‌ம். வெளிநாட்டுக்கான பிரிண்ட்டுகளு‌ம் 2 நா‌ள் மு‌ன்னரே சென்றுவிட்டதாம். இதற்கெல்லாம் படத்தின் இயக்குனர் கரு.பழனியப்பன்தான் காரணமாம்.

கொடுத்த பட்ஜெட்டில் குறித்த நேரத்தில் படத்தை முடித்திருக்கிறார். இதனால் நிறைய தயாரிப்பாளர்கள் படம் இயக்க இவரை கூப்பிடுகிறார்களாம். பிரிவோம் சந்திப்போம் படம் ரிலீஸாகியு‌ள்ளது. அதன் ரிசல்ட் வரட்டும் அப்புறம் பார்ப்போம் என்று சொல்லிவிட்டாராம் கரு.பழனியப்பன்.
About Writer
Webdunia