1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஹீரோவாகும் தயாரிப்பாளர்!

ஹீரோவாகும் தயாரிப்பாளர்!
இயக்குனர் லிங்குசாமி படங்களை இயக்குவதில் பிஸியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் படத் தயாரிப்பிலும் கவனம் செலுத்கிறார்.

தீபாவளி படத்தை தொடர்ந்து பூபதி பாண்டியன் இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிப்பதாக இருந்தார்.

அந்த படம் கைவிட்ட நிலையில் அடுத்து பருத்திவீரன் கார்த்திக்கை வைத்து ஒரு படத்தை இயக்குகிறார் லிங்குசாமி.

இது இவரது தம்பி போஸ்தான் தயாரிக்கிறார். இதைத் தொடர்ந்து இன்னொரு படத்தை தயாரிக்கிறார்.

இதை காதல், கல்லூரி படங்களை இயக்கிய பாலாஜி சக்திவேல் இயக்கவிருக்கிறார்.

ஹீரோவாக நடிக்கப்போவது வேறு யாருமல்ல... லிங்குசாமியின் தம்பி போஸ்தான்.

கதை கேட்டு போட்டோ ஷுட்டும் முடிந்துவிட்டது!