1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

விஜய் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க மறுத்த வடிவேலு

விஜய் படத்திற்கு கால்ஷீட் கொடுக்க மறுத்த வடிவேலு
குருவி படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலுவிடம் கால்ஷீட் கேட்டிருக்கிறார் இயக்குனர் தரணி.

அவரமொத்தம் 75 நாட்கள் கால்ஷீட் கேட்க, மிரண்டுபோன வடிவேலு, ஒரு படத்துக்கு 15 நாளுக்கு மேல் கால்ஷீட் தரமாட்டேன். அதனால் என்னால் 75 நாள் கால்ஷீட்டில் நடிக்க முடியாது என்று சொல்லிவிட்டாராம்.

இப்போது அந்த கேரக்டரில் விவேக் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். படத்தின் நாயகன் விஜய், கதாநாயகி த்ரிஷா இருவரும் குருவி படத்திற்கு மொத்தம் நூறு நாள்கள் கால்ஷீட் கொடுத்திருக்கிறார்களாம்.
About Writer
Webdunia