சேரனுக்கு புதுச்சேரி அரசு சிறந்த இயக்குனர் விருது!
|
புதுச்சேரி அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை மற்றும் நவதர்சன் திரைப்படக் கழகம் ஆகியவை இணைந்து நடத்தும் இந்திய திரைப்பட விழா-2007 நேற்று நடைபெற்றது. விழாவில் இயக்குனர் சேரனுக்கு சிறந்த இயக்குநருக்கான விருதையும், ரூ.10 ஆயிரம் பணமுடிப்பையும் முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
இந்த பண முடிப்பை வறுமையில் உள்ள வயதான முதியவருக்கு வழங்கும்படி இயக்குநர் சேரன், முதல்வர் ரங்கசாமியிடம் திரும்ப அளித்தார்.
