1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

கலக்கப் போகும் `வாரணம் ஆயிரம்''

வாரணம் ஆயிரம்
சென்னையில் கேம்பகோலா வளாகத்தில் `வாரணம் ஆயிரம்' படத்தின் படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இது தவிர அமெரிக்காவிலும், ஆப்கானிஸ்தானிலும் படப்பிடிப்பு நடத்தப் போகிறாராம் இயக்குனர் கௌதம் மேனன்.

இதற்கு முன் தான் எடுத்த படங்களைவிட இந்தப் படத்தை மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப் போகிறாராம். அதற்காக ஹாலிவுட்டிலிருந்து முக்கியமான டெக்னீஷியன்களை படத்தில் பணிபுரியச் செய்யப் போகிறாராம்.

அதேபோல் ஹாலிவுட்டில் தங்கியிருந்து சில தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொண்டு வந்திருக்கிறாராம் கௌதம்.

படத்தில் ஜெனிலியா மற்றும் ரம்யா என்று இரண்டு கதாநாயகிகள் சூர்யாவிற்கு. படத்தில் பல்வேறு பரிமாணங்களுடன் சூர்யாவின் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்த இருக்கிறாராம் இயக்குனர்.
About Writer
Webdunia