'டீ'யில் போதைப்பொருள் கலக்கும் மோடி - பேனி பிரசாத் வர்மா கடும் தாக்கு

FILE

பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி நாடு முழுவதும் "டீ குடித்து விவாதிப்போம்" என்னும் பெயரில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது பிரச்சாரத்தை, காங்கிரசின் மூத்த தலைவரும் இரும்பு எஃகு துறையின் இணை அமைச்சருமான பேனி பிரசாத் வர்மா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், "மோடி தான் குடிக்கும் ‘டீ’யில் ஓபியம் எனப்படும் ஒருவகையான போதை மருந்தை கலக்குறார். இதனால் மக்களை போதை மருந்துக்கு அடிமையாக்க முயற்சி செய்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு பேனி பிரசாத் கூறுகையில், "இந்தியா போன்ற வளரும் நாடுகளில் சமூக நல்லிணக்கத்தை பாதுகாக்க, மோடியை அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைத்திருக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

Webdunia|
"டீ குடித்து விவாதிப்போம்" என்ற மோடியின் பிரச்சார யுக்தியை, டீ-யில் போதைப்பொருள் கலக்குகிறார் மோடி என்று காங்கிரஸ் எம்.பி. பேனி பிரசாத் வர்மா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதே பேனி பிரசாத் வர்மா, கடந்த வருடம் மோடியை “பைத்தியக்கார நாய்” என்றும், “கோத்ராவின் களங்கம்” என்றும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :