ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஏப்ரல் 2024 (14:54 IST)

எய்டன் மர்க்ரம் தலைமையில் தயாரானது தென்னாப்பிரிக்க அணி! – உலகக்கோப்பை டி20 அணி விவரம்!

Aiden Markaram
உலகக்கோப்பை டி20 போட்டிகள் ஜூன் மாதம் தொடங்க உள்ள நிலையில் தற்போது தென்னாப்பிரிக்கா அணி ப்ளேயர்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.



ஜூன் மாதம் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக பிரபலமான நாட்டு கிரிக்கெட் அணிகள் அனைத்தும் தயாராகி வருகின்றன. இந்த உலக கோப்பை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறும் நிலையில் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டின் ப்ளேயர்கள் பட்டியலை வெளியிட தொடங்கியுள்ளன. அந்த வகையில் தற்போது தென் ஆப்பிரிக்க அணியும் தனது ப்ளேயர்களை அறிவித்துள்ளது.

அணி ப்ளேயர்கள் விவரம்:

எய்டன் மர்க்ரம் (கேப்டன்), ஒட்னியல் பார்ட்மேன், ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், ஜார்ன் ஃபோர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், கேசவ் மஹாராஜ், டேவிட் மில்லர், அன்ரிச் நார்ட்ஜே, ககிசோ ரபாடா, ரியான் ரிக்கல்டன், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.

Edit by Prasanth.K