ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 19 ஆகஸ்ட் 2020 (11:37 IST)

தல தோனிக்கு சென்னையில் Farewell போட்டி! – விவி லக்‌ஷ்மன் கணிப்பு!

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி அறிவித்த நிலையில் அவருக்கான ஃபேர்வெல் போட்டி சென்னையில் நடைபெறும் என விவி லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர்களிலேயே மக்களால் கொண்டாடப்படுபவர்களில் ஒருவரான முன்னாள் கேப்டன் தோனி தனது ஓய்வை சுதந்திர தினத்தில் அறிவித்தார். இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் அவர் இல்லாத கிரிக்கெட்டை நினைத்து பார்க்க முடியவில்லை என அவரை வாழ்த்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்து வந்தனர்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெறும்போது நடத்தப்படும் ஃபேர்வெல் போட்டியை ராஞ்சியில் நடத்த வேண்டும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த சோரன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தோனியின் கடைசி ஆட்டம் குறித்து பேசியுள்ள விவி லக்‌ஷ்மண் “தோனி இந்திய அணிக்கான தனது கடைசி ஆட்டத்தை நீல நிற ஜெர்சியில் ஏற்கனவே ஆடிவிட்டார். அவரது ஃபேர்வெல் ஆட்டம் அவரது விருப்பமான மஞ்சள் நிற சிஎஸ்கே ஜெர்சியில்தான் நடக்கும். அதுவும் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் என்பது எனது கணிப்பு” என தெரிவித்துள்ளார்.