ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (22:14 IST)

டி- 20 உலக கோப்பையில் இவருக்கு நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டும்- கில்கிறிஸ்ட்

Australia
20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் டிம் டேவிட்டிற்கு  நிச்சயம் வாய்ப்பு வழங்க வேண்டுமென முன்னாள் கிரிக்கெட் ஜாம்பாவான் தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல்  நவம்பர் 13 ஆம் தேதி வரை  டி-20 உலகக் கோப்பை  தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட அணிகள் விளையாடவுள்ளன.

இந்த நிலையில், ஆஸ்திரேலிய அணியின்  அதிரடி பேட்ஸ்மேன் டிம் டேவிட் அந்த அணிக்கான,டி-20 உலகக் கோப்பை தொடரில்,  கண்டிப்பாக விளையாட வேண்டும் என முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:

ஆஸ்திரேலிய லெவன் அணியில் டிம் டேவிட்டுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். கடந்த போட்டிகளில் எல்லாம் அவர் சிறப்பாக விளையாடியுள்ளார். அவரால் எல்லா சூழ் நிலையில் சிறப்பாக செயல்பட முடியும்! அவரை பார்த்து எதிரணி வீரர்கள் பயப்படுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக போட்டியில் டிம் டேவிட் 27 பந்துகளில் 54 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.