செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified புதன், 23 நவம்பர் 2022 (20:19 IST)

வங்கதேச தொடரில் ஜடேஜாவுக்குப் பதில் இந்த வீரருக்கு இடம்!

நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இடம்பெறாத ஜடேஜா, வங்கதேச தொடரில் இடம்பெறவில்லை எனில் அவருக்குப் பதில், பிரபல வீரர் இடம்பெறலாம் எனக் கூறப்படுகிறது.

சமீபத்தில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா, ஆசிய கோப்பை தொடரில் முழங்காலில் ஏற்பட்ட காயத்தால் தொடரில் இருந்து விலகினார்.  இதையடுத்து, டி-20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்தும் அவர் விலகி, ஓய்வெடுத்து வரும் நிலையில், தற்போதும் நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 தொடரிலும் அவர் விலகினார்.

இந்த நிலையில், அடுத்து, வங்கதேசத்திற்கு எதிராக நடக்கவுள்ள தொடரில் ஜடேஜா பங்கேற்பாரா எனக் கேள்வி எழுப்பப்பட்டு வரும் நிலையில், அவர் உடற்தகுதிய நிரூபித்தால நிச்சயம் இடம்பெறுவார் என்றும், அவர் உடற்தகுதியைப் பெறாத நிலையில், அவருக்குப் பதில், சூர்யகுமார் யாதவ் அணியில் இடம்பெறுவார் எனக் கூறப்படுகிறது.

Edited by Sinoj