1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 15 அக்டோபர் 2022 (22:14 IST)

டி-20 உலக்கோப்பை: விற்றுத் தீர்த்த டிக்கெட்டுக்கள்

T 20 WORLD CUP
வரும் அக்டோபர் 16 ஆம் தேதி முதல்  நவம்பர் 13 ஆம் தேதி வரை ஐசிசி  டி-20  டி-20 உலகக் கோப்பை  தொடர் நடக்கவுள்ளது.

இத்தொடரில், இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் விளையாடவுள்ளன.

இந்த  நிலையில் உலகளவில் கிரிக்கெட்டில் வலுமையான அணியான இந்தியா இப்போட்டியில் கோப்பை வெல்லுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த  நிலையில்   8 வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடர் வரும் ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ள நிலையில்,  13 நகரங்களில் நடைபெறவுள்ளது. இதில், முதல் சுற்றில் 8அணிகளும், அதில் இருந்து சூப்பர் சுற்றுக்கு 4 அணிகள் தகுதி பெறும்.

இந்த நிலையில்,20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கு,  டிக்கெட் மறுவிற்பனைக்கு என அதிகாப்பூர்வ இணையதளம் தொடங்கக்கப்பட்ட நிலையில், இதுவரை 6 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக , இந்தியா –பாகிஸ்தான் அணிகள் வரும் 23 ஆம் தேதி மோதவுள்ள நிலையில் மெல்போர்னில் நடக்கவுள்ள இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் 90 ஆயிரம் விற்பனையாகியுள்ளன.

Edited by Sinoj