திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 9 நவம்பர் 2023 (07:40 IST)

நெதர்லாந்து போட்டியில் இந்திய அணியில் மூத்த வீரர்களுக்கு ஓய்வா?

இந்த உலகக் கோப்பை தொடரில் அசுர பலத்தோடு வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது இந்திய அணி. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் முதல் அணியாக அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது.

இந்தியாவோடு அரையிறுதியில் மோதவுள்ள அணி எது என்பதற்கான போட்டி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் நியுசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையே நடந்து வருகிறது. இந்நிலையில் தங்கள் கடைசி லீக் போட்டியில் இந்திய அணி நெதர்லாந்து அணியை வரும் 12 ஆம் தேதி எதிர்கொள்கிறது.

இந்த போட்டிக்கான இந்திய அணியில் மூத்த வீரர்களான பும்ரா மற்றும் முகமது சிராஜ் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு, அவர்களுக்கு பதில் முகமது சிராஜ் மற்றும் ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என தெரிகிறது. இதை முன்னிட்டு அவர்கள் பெங்களூருவில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.