ஞாயிறு, 1 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 11 அக்டோபர் 2024 (10:23 IST)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்… சில போட்டிகளை இழக்கும் ரோஹித் ஷர்மா!

வங்கதேச அணிக்கெதிரான டெஸ்ட் தொடரை 2-0 என்ற வெற்றிக் கணக்கில் நிறைவு செய்தது இந்திய அணி. இதையடுத்து தற்போது வங்கதேச அணிக்கெதிரான டி 20 தொடரில் ஆடிவருகிறது. இந்த தொடர் முடிந்ததும் நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.

அந்த தொடர் முடிந்ததும் தென்னாப்பிரிக்கா சென்று அங்கும் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன் பின்னர் நவம்பர் 21 முதல் ஜனவரி 6 ஆம் தேதி வரை நடக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரை விளையாட செல்கிறது.

இந்த தொடர் முதல் அல்லது இரண்டாவது போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா பங்கேற்க மாட்டார் என சொல்லப்படுகிறது. தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் அப்போது இந்தியாவில் இருப்பார் என சொல்லப்படுகிறது.