செவ்வாய், 21 மார்ச் 2023
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated: செவ்வாய், 20 செப்டம்பர் 2022 (16:16 IST)

“ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இவர் செயல்பட்டால் நன்றாக இருக்கும்..” ரிக்கி பாண்டிங் கருத்து!

ஆஸ்திரேலியாவின் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டின் கேப்டன் ஆரோன் பிஞ்ச் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபகாலமாக அவர் பார்மில் இல்லாமல் ரன்கள் எடுக்க முடியாமல் சொதப்புவதே இதற்குக் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதையடுத்து அவருக்குப் பின்னர் கேப்டனாக செயல்படப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து பேசியுள்ள முன்னாள் ஆஸி கேப்டன் ரிக்கி பாண்டிங் “பேட் கம்மின்ஸ் ஒருநாள் அணிக்கு கேப்டனாக செயல்பட்டால் சிறப்பாக இருக்கும். அவர் கடந்த காலங்களில் டெஸ்ட் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தியதால் நிறைய ஒருநாள் போட்டிகளை விளையாட வில்லை. ஆனாலும் அவர் ஒருநாள் அணிக்கான கேப்டனாக செயல்பட்டால் சிறப்பாக இருக்கும்.” என்று கூறியுள்ளார்.

ஆஸி டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பேட் கம்மின்ஸ் கடந்த ஆண்டு இறுதியில் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.