திங்கள், 2 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 8 ஏப்ரல் 2023 (16:49 IST)

இலங்கை அணிக்கு எதிரான டி-20 தொடரை வென்ற நியூசிலாந்து அணி

new zealand-  sri lanka
இலங்கை அணிக்கு எதிரான டி-20  தொடரை  நியூசிலாந்து அணி2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 வது டி-20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற்றது.

இப்போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியில் மெண்டிஸ் 73 ரன்களும், பரீரா 33 ரன்களும், நிசாங்க 25  ரன்களும் அடித்தனர்.

20ஓவர்கள் முடிவில், இலங்கை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 182  ரன்கள் எடுத்து,  நியூசிலாந்து அணிக்கு 183  ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

நியூசிலாந்து அணி சார்பில், லிஸ்டர் 2 விக்கெடும், இஸ் மற்றும் ஆதாம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில், டிம் செய்பெர்ட் 88 ரன்களும், லதாம் 31 ரன்களும், போவஸ் 17 ரன்களும் அடித்தனர். எனவே  நியூசிலாந்து அணி 19.6 ஓவர்களில் 183 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2-1  என்ற கணக்கில் நியூசிலாந்து வென்றது.